By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

news team
Last updated: February 23, 2026 1:43 pm
By news team
Share
1 Min Read
பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை
SHARE

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்தக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இலங்கையின் நிலையான தொலைபேசி எண்களை ஒத்த வெளிநாட்டு எண்களிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைத் தொடர்பு கொள்கின்றனர்.ஆரம்பத்தில் வங்கி அதிகாரிகள் போலப் பேசி, உங்கள் கணக்கு தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறி பயமுறுத்துகின்றனர்.பின்னர், சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகள் போன்ற ஆடை அணிந்த நபர்களுடன் வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.இந்த வீடியோ அழைப்புகளின் போது, தாங்கள் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கி, பொதுமக்களை விசாரணை செய்வது போலவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது போலவும் நடித்து அவர்களை நம்ப வைக்கின்றனர்.உங்களது வங்கி கணக்கைப் பாதுகாப்பதாகவோ அல்லது சரிபார்ப்பதாகவோ கூறி, அவர்கள் வழங்கும் பல வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணம், பின்னர் இடைத்தரகர்கள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில்,வங்கி விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்களை எவருக்கும் பகிர வேண்டாம்.இலங்கை பொலிஸார் ஒருபோதும் வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்தி பணப் பரிமாற்றங்களைக் கோருவதில்லை.இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.இந்த மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், இவ்வாறான நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியா

ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற கணவன் – நெகிழ்ச்சி சம்பவம்

By news team
டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டண திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
உள்நாடு

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டண திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

By news team
ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

By news team
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் – பொலிஸார் கடும் கண்காணிப்பு
உள்நாடு

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் – பொலிஸார் கடும் கண்காணிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?