By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

news team
Last updated: February 11, 2026 8:00 am
By news team
Share
1 Min Read
எரிபொருள் நெருக்கடியால் கியூபா முடங்கும் அபாயம் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
SHARE

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கியூபா, தனது அண்டை நாடான வெனிசுவேலாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யைப் பெற்று வந்தது. அதற்கு ஈடாக பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளை கியூபா வழங்கி வந்தது.சமீபத்தில், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க இராணுவம் கைது செய்து நியூயோர்க் சிறையில் அடைத்ததைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெனிசுவேலாவிலிருந்து கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் ஏனைய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.ஏற்கனவே கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அந்நாட்டை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.இதனால் விமானம் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.நிலைமையைச் சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 4 நாட்களுக்கு மூட கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் இந்தச் செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மோசமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா, கியூபாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.அதேபோல், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், அமெரிக்காவின் வரி எச்சரிக்கைகளுக்கு அஞ்சாமல் கியூபாவுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரும் இந்தச் சூழல் குறித்துத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

TAGGED:americamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு - காதலன் வைத்தியசாலையில்
உள்நாடு

வென்னப்புவையில் காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு – காதலன் வைத்தியசாலையில்

By news team
ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது
உள்நாடு

ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது

By news team
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது

By news team
5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது
உள்நாடு

5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?