By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை

news team
Last updated: January 28, 2026 2:23 pm
By news team
Share
1 Min Read
18 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தீவிர பரிசீலனை
SHARE

இணையத்தளங்களில் பாடசாலை மாணவர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான விடயங்கள் கட்டுப்பாடின்றி பரவி வரும் நிலையில், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்கள் ஊடாக கடந்த காலங்களில் பதிவான பாரிய அளவிலான அசம்பாவிதங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தடை குறித்த ஆலோசனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிக்கும் இறுதி முடிவு வெகுஜன ஊடக அமைச்சு அல்லது கல்வி அமைச்சினால் எடுக்கப்பட வேண்டும். கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டதும், அதனை அமுல்படுத்துவதற்கான முழுமையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கத் தயார் என ர பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.அண்மையில் கொழும்பு பாடசாலை ஒன்றின் தலைமை மாணவர் மற்றும் மூன்று ஆசிரியைகளுக்கு இடையிலான நெருக்கமான உறவு குறித்த கானொளிகள் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவாதம் வலுப்பெற்றுள்ளது.”சமூக ஊடக உள்ளடக்கங்களால் சிறுவர்களின் மனநிலைக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நாடு ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர வேண்டும்.” என எரங்க வீரரத்ன தெரிவித்தார்.அதேவேளை சிறுவர்களின் மனநலம், இணையவழி அச்சுறுத்தல்கள் (Cyberbullying) மற்றும் தீய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கப் பல நாடுகள் ஏற்கனவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.இதன்படி அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை கடந்த டிசம்பர் முதல் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது.இதனையடுத்து சீனா,பிரான்ஸ்,அமெரிக்கா (புளோரிடா) ஆகிய பகுதிகளிலும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvansocial mediatamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
உள்நாடு

மூடப்படும் அபாயத்தில் 1,500 பாடசாலைகள்: ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

By news team
கல்கிஸ்ஸையில் 8 இலட்சம் ரூபா மதிப்புள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது
உள்நாடு

கல்கிஸ்ஸையில் 8 இலட்சம் ரூபா மதிப்புள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது

By news team
மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

By news team
QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்
உள்நாடு

QR மற்றும் ஒற்றை-இரட்டை முறை நீக்க வாய்ப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?