By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தரம் 06க்கு மேற்பட்ட 1 மில்லியன் மாணவிகளுக்கு அணையாடைகள் – 2026 முதல் நாடு முழுவதும் தேசியத் திட்டம்

news team
Last updated: December 23, 2025 12:39 pm
By news team
Share
1 Min Read
தரம் 06க்கு மேற்பட்ட 1 மில்லியன் மாணவிகளுக்கு அணையாடைகள் – 2026 முதல் நாடு முழுவதும் தேசியத் திட்டம்
SHARE

இலங்கையிலுள்ள தரம் 06க்கு மேற்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவிகளுக்கு அணையாடைகளை (Sanitary Napkins) வழங்கும் தேசியத் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.டிசம்பர் 22 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்ற மாணவிகளின் சுகாதார நலன் குறித்த கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.2024 இல் கிராமப்புற, தோட்டப்பகுதி மற்றும் பின்தங்கிய பாடசாலைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 1.44 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. தகுதியுள்ள ஒவ்வொரு மாணவிக்கும் அணையாடைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 1,440 ரூபா பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும்.இவை மாகாண கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். மாணவிகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை மட்டுமே கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்படும்.கலந்துரையாடலின் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார், மாணவிகள் தங்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.புவியியல் ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் கருத்திற்கொண்டு வவுச்சர் விநியோக பொறிமுறையைச் சீரமைக்க வேண்டும். பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட அணையாடைகளை சுற்றாடலுக்குப் பாதிப்பின்றி அகற்றும் முறைகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

TAGGED:Harini AmarasuriyaSanitary Napkinsschool studentSri Lankan Schools
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

எரிபொருள் விலை உயர்வு இருந்தும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
உள்நாடு

எரிபொருள் விலை உயர்வு இருந்தும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

By news team
நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்
உள்நாடு

நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டு – மாமியார் உயிரிழப்பு மாமனார் படுகாயம்

By news team
மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் – அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்
உள்நாடு

மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் – அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்

By news team
இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு -இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?