By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்

news team
Last updated: December 22, 2025 8:48 pm
By news team
Share
1 Min Read
காதலரை திருமணம் செய்த மகள் “இறந்ததாக” அறிவிப்பு – உருவ பொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பம்
SHARE

மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.அதன்படி, மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மயானத்தை அடைந்த பிறகு, குடும்பத்தினர் சிதையை தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட, இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக, உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டது.இதுகுறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, தனது மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது என்றும், இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்றும் கூறினார். உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டுசென்று தீ மூட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

TAGGED:love marragemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

By news team
புனித தலைப்பிறை தென்படவில்லை - நாளை மறுநாள் நோன்பு பெருநாள்
உள்நாடு

புனித தலைப்பிறை தென்படவில்லை – நாளை மறுநாள் நோன்பு பெருநாள்

By news team
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
உலகம்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

By news team
புல்மோட்டை நகரில் அதிக விலைக்கு டீசல் விற்பனை – 390 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது
உள்நாடு

புல்மோட்டை நகரில் அதிக விலைக்கு டீசல் விற்பனை – 390 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?