By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்

news team
Last updated: December 22, 2025 3:46 pm
By news team
Share
1 Min Read
உத்தரகாண்ட் மாநில அரசு பள்ளிகளில் பகவத் கீதா வாசிக்க கட்டாயம்
SHARE

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “சுமார் 17,000 அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும்” என்றார்.உத்தரகாண்ட் அரசின் இந்த புதிய உத்தரவுபடி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது தினமும் ஒரு பகவத்கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அதன் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்க வேண்டும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது பள்ளி அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும்.ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம் வகுப்பறைகளில் விவாதிக்கப்படும், மேலும் மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதலையும், ஈடுபாட்டையும் ஆழப்படுத்த உதவும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அம்மாநில கல்வித்துறைகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. உத்தரகண்ட் மதர்சா கல்வி வாரியத் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி இந்த முடிவை வரவேற்று, “ராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரும் நமது மூதாதையர்கள், ஒவ்வொரு இந்தியரும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்” என்று கூறியுள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தேவேந்திரமுனை தெற்கே கடலில் 123 கிலோ ஹெரோயின் பறிமுதல் – 5 பேர் கைது
உள்நாடு

தேவேந்திரமுனை தெற்கே கடலில் 123 கிலோ ஹெரோயின் பறிமுதல் – 5 பேர் கைது

By news team
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை - கொழும்பு உயர் நீதிமன்றம்
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை – கொழும்பு உயர் நீதிமன்றம்

By news team
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்

By news team
IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உள்நாடு

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?