By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

2026 பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் – பரீட்சைகள் ஆணையாளர் உறுதி

news team
Last updated: April 1, 2026 10:59 am
By news team
Share
1 Min Read
2026 பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் – பரீட்சைகள் ஆணையாளர் உறுதி
SHARE

2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.நேற்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே 2026 பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் அதற்கேற்ப தயாராகுமாறும் கேட்டுக்கொண்டார்.கடந்த காலங்களில் பரீட்சை திகதிகள் மாறியதால் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதால், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகள் நடத்தப்படும் என்று உறுதிபடுத்தினார்.அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.இதேவேளை 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளன. இன்று முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கப்படுவதாகவும், ஏப்ரல் 30 முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது
உள்நாடு

மோட்டார் சைக்கிள் திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பு: வரக்காபொலையில் மூவர் கைது

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது
உள்நாடு

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

By news team
ஈரானிய எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி – அமெரிக்கா தற்காலிக தடை நீக்கம்
உலகம்

ஈரானிய எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி – அமெரிக்கா தற்காலிக தடை நீக்கம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?