நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.இந்த எச்சரிக்கை நாளை (19) வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி மேல், சபரகமுவ, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat Index) ‘அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு’ (Caution Level) அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துவதுடன், தேவையற்ற வகையில் வெயிலில் தங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
