By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

news team
Last updated: March 27, 2026 2:14 pm
By news team
Share
1 Min Read
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
SHARE

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என அவர் தெரிவித்தார். தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது என்பதுடன், காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேர் உச்சியில் காணப்படுவதாலும், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது.தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறும், அடிக்கடி நீர் அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்படாது - எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்
உள்நாடு

QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்கப்படாது – எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்

By news team
மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
உள்நாடு

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

By news team
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது

By news team
QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு
உள்நாடு

QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?