By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

news team
Last updated: April 2, 2026 5:41 am
By news team
Share
1 Min Read
மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
SHARE

எதிர்வரும் பண்டிகைக் காலம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நாட்டுக்குத் தேவையான போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.எவ்வாறிருப்பினும், எரிபொருள் நிலையங்களில் மீண்டும் வரிசைகள் உருவாவதைத் தடுக்கும் நோக்கில், ஒற்றை மற்றும் இரட்டை இலக்க அடிப்படையிலான கியூ.ஆர். குறியீட்டு முறைமை இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் சில வாரங்களுக்கு தொடர்ந்து மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.கொழும்பில் புதன்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,ஒற்றை இரட்டை இலக்கத்தின் அடிப்படையில் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் இன்று வியாழக்கிழமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். இன்றைய தினம் 32 000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 5000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் என்பவற்றுடன் கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளது. 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மேலும் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.மார்ச்சில் முற்பதிவு செய்யப்பட்ட கனிசமான கப்பல்கள் நாட்டை வந்தடைந்ததைப் போன்று, இம்மாதமும் கப்பல்கள் உரிய தினங்களில் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் பண்டிகை காலங்களில் மாத்திரமின்றி, மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் எரிபொருட்களை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுத்துகின்றோம்.எதிர்வரும் சில வாரங்களுக்கு ஒற்றை இரட்டை மற்றும் கியூ.ஆர். குறியீட்டு முறைமைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். இந்த முறைமை நடைமுறையிலிருப்பதன் காரணமாகவே வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை தொழிற்துறைகளுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படவில்லை என்றார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை
உள்நாடு

2026ல் 19 நாட்கள் இலங்கை முழுவதும் மதுபான விற்பனை தடை – மதுவரித் திணைக்களம் கடும் எச்சரிக்கை

By news team
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு; அதிகாரிகளுடன் சந்திப்பு ரத்து – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை

By news team
எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?