By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் – பொலிஸார் கடும் கண்காணிப்பு

news team
Last updated: January 27, 2026 1:48 pm
By news team
Share
1 Min Read
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பரவல் – பொலிஸார் கடும் கண்காணிப்பு
SHARE

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி, பிஸ்கட் மற்றும் சாரவிட ஆகியவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இவ்வாறான வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பில் இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன், போதைப்பொருள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், இது குறித்து எவருக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் எச்சரித்தார்.இதன்படி, கொக்கெய்ன், ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை 5 கிராமுக்கு மேல் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.தமது நெருங்கியவர்கள் இந்த போதைப்பொருள் அபாயத்திற்கு பலியாவதற்கு முன்னர், தமது பிரதேசங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அது குறித்து தகவல் வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் வலியுறுத்தினார்.

TAGGED:drugmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

By news team
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு
உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி உத்தரவு

By news team
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்

By news team
ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?