By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

news team
Last updated: January 3, 2026 10:35 am
By news team
Share
1 Min Read
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் 25 ஆண்டுகளாக இயங்கும் மதுபானசாலை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்
SHARE

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில், நோர்வூட் வெஞ்சர் தோட்டப் பகுதியில் சுமார் 25 வருடங்களாக இயங்கிவரும் மதுபானசாலையை மூடுமாறும், அதற்கான அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் கோரி இன்று (03) காலை பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி”, “சிறுவர்களின் வாழ்வைச் சீர்குலைக்கும் மதுபோதை”, “பாடசாலை இடைவிலகலுக்குக் காரணமாகும் மதுபானசாலைகள்”, “வெஞ்சரின் எதிர்காலம் மதுபோதையில்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானசாலை குடியிருப்புப் பகுதியில் இயங்குவதால், அருகிலுள்ள ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், தோட்டப் பகுதியில் இந்த மதுபானசாலை அமைந்துள்ளதால், பலர் மாதாந்த சம்பள அடிப்படையில் கடன் புத்தகத்தில் பதிவு செய்து மதுபானம் அருந்தி வருகின்றனர்.இதனால் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சுமார் 1,500 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடும் இந்த மதுபானசாலையை உடனடியாக மூடுவதற்கு நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்புக்காகப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvanProtesttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு
உலகம்

நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு

By news team
போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
உள்நாடு

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

By news team
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்
உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஜனவரி 09 வரை விளக்கமறியல்

By news team
இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு
இந்தியா

இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?