By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Feb 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்

news team
Last updated: December 26, 2025 6:44 am
By news team
Share
2 Min Read
தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்
SHARE

ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை, உண்மையான திஸ்ஸ விகாரை அல்ல என நாகதீப புராண ரஜமகா விகாராதிபதியும் வட இலங்கையின் பிரதம சங்கநாயக்க தேரருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் கூறுகிறார்.“உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது.

ஆனால், இப்போது திஸ்ஸ விகாரை என அழைக்கப்படும் பகுதி காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்குச் சொந்தமானது.யுத்த காலத்தில் குடிமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடத்தையே திஸ்ஸ விகாரை என்ற பெயரில் போலியான திஸ்ஸ விகாரையாக ஆரம்பித்துள்ளனர்.”ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தன்னைப்போன்று வேறு எந்த பௌத்தரும் இவ்விடயம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் ஒரு காணொளி உரையின் மூலம் தெரிவித்துள்ளார்.இராணுவப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ ராஜமகா விகாரையின் விகாராதிபதி சத்தர்மகீர்த்தி சங்கைக்குரிய கிந்தோட்டை நந்தாராம தேரருக்கு, அமரபுர ஸ்ரீ கல்யாணவம்ச நிகாயவின் வட இலங்கையின் உப பிரதம சங்கநாயக்க பதவிக்கான ‘ஸ்ரீ சன்னஸ் பத்ர’ மற்றும் ‘விஜினி பத’ ஆகியவை புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டதன் பின்னர், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvanSri Lankan Peoplestamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது
உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது

By news team
வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
உள்நாடு

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By news team
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்
உள்நாடு

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.10,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி இலவசம்

By news team
வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்
உலகம்

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?