By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

news team
Last updated: March 3, 2026 7:46 pm
By news team
Share
1 Min Read
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்
SHARE

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.யுவதியின் சடலம் மீது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவத்தை கேள்வியுற்ற ஹட்டன் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி “பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம், வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை வெளிக்கொண்டுவா” போன்ற கோஷங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உட்பட ஏனைய வைத்தியர்களும் வருகை தந்ததுடன் வைத்திய அதிகாரி பஷ்லி சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், “உயிர்மாய்ப்பு செய்து கொண்ட யுவதியின் சடலமொன்று கடந்த 25ஆம் திகதி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.குறித்த சடலம் முதல் நாள் பிரேத அறையில் இருந்த நிலையினை விட மறு நாள் வேறு ஒரு நிலையில் காணப்பட வில்லை. ஆனால் இது தொடர்பாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. பிரேத அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவினை நாங்கள் பரிசோதித்து பார்த்தோம்.அப்போது அந்த சிற்றூழியர்கள் மூவரும் பிரேத அறைக்கு சென்றுவந்த காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என்றார்.குறித்த மூன்று சந்தேகநபர்களையும் இன்று மாலை 4 மணிக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

TAGGED:Hospitals in Sri LankamuthalvanSexual harassmenttamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
யாழில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி
உள்நாடு

யாழில் மதுபோதையில் வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி பலி

By news team
அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்
உள்நாடு

அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவு – அடுத்த நடவடிக்கை இன்று தீர்மானம்

By news team
காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்
உள்நாடு

காதல் மறுப்பால் ஆசிரியையின் கைப்பேசி பறித்த சந்தேகநபர் தப்பியோட்டம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?