By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு

news team
Last updated: February 15, 2026 8:28 am
By news team
Share
1 Min Read
சிறையில் இருக்கும் இம்ரான் கான் உடல்நிலை மோசம் – புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு
SHARE

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை புதிய சிறைக்கு மாற்ற பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு, வலது கண்ணில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:ரத்த உறைவு காரணமாக இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே உள்ளது.சிறை அதிகாரிகளின் முறையான சிகிச்சையளிக்காத அலட்சியத்தால் அவரது 85 சதவீத பார்வை பறிபோய்விட்டது.இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இந்த பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்ரான் கான் விரைவில் இஸ்லாமாபாத் சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவித்தார்.”இஸ்லாமாபாத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிவடைந்ததும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார். அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என்பதால், தலைநகர் சிறையிலேயே அடைக்கப்படுவார்,” என்று அவர் கூறினார்.இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அவரது கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இம்ரான் கானை உடனடியாக அல்-ஷிபா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது,” என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்
உள்நாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்பாக தையிட்டி விகாரை எதிர்ப்பு போராட்டம்

By news team
2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது
உள்நாடு

2 கிலோ தங்க நகை திருடிய இளம் பெண் யாழில் கைது

By news team
ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது
உள்நாடு

ராகமவில் 271 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – 34 வயது நபர் கைது

By news team
வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு
உள்நாடு

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?