By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

news team
Last updated: March 27, 2026 1:45 pm
By news team
Share
1 Min Read
கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
SHARE

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் – எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

By news team
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது
உள்நாடு

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

By news team
நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி
உள்நாடு

நிதி மோசடி குற்றச்சாட்டு: நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு மேலும் கால அவகாசம் கோரிய ஷிரந்தி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?