By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

news team
Last updated: December 30, 2025 8:59 am
By news team
Share
1 Min Read
ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
SHARE

ஒடிசாவின் தியோகர் மாவட்டத்தின் காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலையில் 5 வயது சிறுவன் ஒருவன் அழுதவாறே அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேடடுக்கொண்டு இருந்தான். அவனுக்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் நிறுத்தப்பட்டு இருந்தது.இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் அவனிடம் விவரம் கேட்டனர். அப்போது அவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவன் அழைத்து சென்றான்.அங்கு சென்று பார்த்தபோது சிறுவனின் தந்தை இறந்து கிடந்தார். அருகே அவனது தாய் மயங்கிய நிலையில் கிடந்தார்.உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சிறுவனின் தாயை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழந்தார்.பின்னர் இது குறித்து விசாரித்தபோது, அவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கடந்த 27-ந் தேதி மூவரும் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.உடனே அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மூன்று பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். பின்னர் அங்கே விஷம் குடித்துள்ளனர். சிறுவனுக்கும் அவர்கள் விஷம் கொடுத்துள்ளனர்.ஒரு சில மணி நேரத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி மயங்கி விழுந்து உயிருக்குப்போராடியவாறே இருந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுவன், அடர்ந்த காட்டுக்குள் இரவு முழுவதும் கடும் குளிரில் தனது தந்தையின் உடலுக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான். பின்னர் பொழுது விடிந்தபிறகு சாலைக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான்.நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவனை அவனது தாத்தா-பாட்டியிடம் போலீசார் சேர்த்துள்ளனர்.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்
உலகம்

கிறிஸ்துமஸ் போர் நிறுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரிப்பு – வேதனை தெரிவித்த பாப்பரசர்

By news team
கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது
உள்நாடு

கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது

By news team
இன்று மாலை இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
உள்நாடு

இன்று மாலை இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க

By news team
சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு
வணிகம்

சர்வதேச சந்தை தாக்கம்- இலங்கையில் தங்க விலை கணிசமாக உயர்வு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?