By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் – எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்

news team
Last updated: February 21, 2026 11:40 am
By news team
Share
1 Min Read
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டில் இருந்தால் நடவடிக்கை அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் அதிரடி சவால்
SHARE

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் பாதாள உலகச் செயற்பாடுகள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராகத் தயக்கமின்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரால் கடந்த மாதம் எழுப்பப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,

“பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.இதற்குப் பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“எமது கட்சி ஒருபோதும் பாதாள உலகச் செயற்பாடுகளுக்குத் துணை போவதோ அல்லது அதனை ஊக்குவிப்பதோ கிடையாது. கொலை, கொள்ளை மற்றும் மோசடி போன்ற எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் நாம் அனுமதிப்பதில்லை; அவற்றை முழுமையாக நிராகரிக்கின்றோம்.எனவே, எமது கட்சியைச் சேர்ந்த யாராவது இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சான்றுகள் இருக்குமானால், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.” – என்று அவர் சபையில் உறுதியளித்தார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்
உள்நாடு

கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் திட்டம்

By news team
மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை
உள்நாடு

மண்முனை பகுதியில் வெற்றிலை மென்று வெதுப்பக உணவு விற்ற நபருக்கு எதிராக சுகாதார நடவடிக்கை

By news team
அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை
உள்நாடு

அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

By news team
கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து தீவைத்து எரிப்பு – இருவர் கைது
உள்நாடு

கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்து தீவைத்து எரிப்பு – இருவர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?