By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு

news team
Last updated: March 15, 2026 6:39 am
By news team
Share
2 Min Read
இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு
SHARE

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60
மோட்டார் சைக்கிள்கள் : 5
வேன்கள் : 40
மோட்டார் வாகனங்கள் : 15
மோட்டார் லொறிகள்: 200
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
உள்நாடு

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

By news team
கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்

By news team
Website image 1920 x 1080 px 1 4
உள்நாடு

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு வேலை மோசடி: 5 பேர் கைது

By news team
இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு
இந்தியா

இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?