By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அமெரிக்காவில் வானை 45,000 மைல் வேகத்தில் கிழித்து சென்ற எரிகல் அச்சத்தில் உறைந்த மக்கள்

news team
Last updated: March 18, 2026 9:11 pm
By news team
Share
1 Min Read
அமெரிக்காவில் வானை 45,000 மைல் வேகத்தில் கிழித்து சென்ற எரிகல் அச்சத்தில் உறைந்த மக்கள்
SHARE

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தின் வடக்கே நேற்று காலை 9 மணியளவில் வானை கிழித்து கொண்டு எரிகல் ஒன்று சென்றது. எரிபந்து போன்று ஒளிர்ந்தபடியே அது சென்றது. ஒஹியோ, பென்சில்வேனியா மாகாணங்களிலும், நியூயார்க் மற்றும் மிச்சிகன் நகரங்களிலும் பகலில் தெளிவாக இதனை பார்க்க முடிந்தது.அப்போது, 250 டன் எடை கொண்ட டி.என்.டி. என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போன்ற பலத்த சத்தமும் விண்ணை பிளந்துள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். இதுதொடர்பாக சில வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகின. பொதுவாக இதுபோன்ற எரிகல் இரவு நேரத்திலேயே பூமியை கடக்கும்.ஈரானுடன் மோதல் நடந்து வரும் சூழலில், இதனை மக்கள் முதலில் ஏவுகணை தாக்குதல், விமான விபத்து, வெடிகுண்டு என பல்வேறு நிகழ்ச்சிகளாக நினைத்து பயந்துள்ளனர்.ஆனால், அது விண்ணில் இருந்து வந்த ஓர் எரிகல் என விஞ்ஞானிகளும், நாசா குழுவினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். 7 டன் எடையும் மற்றும் 2 மீட்டர் பரப்பளவும் கொண்ட அந்த விண்கல், பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 45 ஆயிரம் மைல் வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது. அப்போது, அது உடைந்துள்ளது.இதனால், பலத்த சத்தம் கேட்டுள்ளது. 250 டன் எடை கொண்ட டி.என்.டி. வெடிக்கும்போது ஏற்பட்ட ஆற்றலும் வெளிப்பட்டு உள்ளது. இந்த சத்தத்தில் வீடுகள் குலுங்கின. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. இந்த பயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அவசரகால தொலைபேசியில் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.எரிந்து கொண்டே, ஒளியை உமிழ்ந்தபடி வந்த அந்த எரிகல், ஈரி என்ற ஏரியின் நீர்பரப்புக்கு மேலே 30 மைல்கள் தொலைவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் 34 மைல்கள் தூரத்திற்கு காற்றில் பயணித்து, ஒஹியோவின் கிளீவ்லேண்ட் நகரின் வேலி சிட்டி பகுதியில் உடைந்து விழுந்துள்ளது. அதன் உடைந்த பாகங்கள் நிலத்தில் கிடக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும், அது உறுதி செய்யப்படவில்லை.

TAGGED:americaMeteormuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
உள்நாடு

ஆட்டை மீட்கச் சென்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By news team
யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

By news team
பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது
உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்டமூலம் வெளியானது

By news team
சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி
உள்நாடு

சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு – இலங்கையில் 10,000 ரூபாய் வீழ்ச்சி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?